Monday 3 August 2015

்குண்டர்கள் சட்டமாமே...

போராட்டம்  என்ற பெயரில்....

செல்போன் டவர்கள், மரங்கள், கட்டிடங்கள் மற்றும் இவை போன்ற உயரமானவைகள் மீது ஏறி தற்கொலை செய்து விடுவதாக மிரட்டுபவர்கள்....

பொதுச்சொத்துக்குச் சேதங்கள விளைவிப்பவர்கள்....

அல்லது இவைகளைச் செய்திட முயற்சிப்பவர்கள்.....

இவர்களைத் தூண்டுவோர்...

இவர்களுக்கு உதவுவோர்...

மீது, பொது அமைதி மற்றும் நலன் கருதி, குண்டர் சட்டம் பாய்வதற்குத் தயாராவதாகக் கூறப்படுகிறதே....

உண்மையா...

ஐனநாயகத்திற்கு ஆபத்தோ?

ஜனநாயகத்திற்கு ஆபத்தோ?

தங்களைத் தாங்களே ஆள்வதற்கு...
தங்களுக்கு வேண்டியனவற்றைத் தாங்களே செய்துக் கொள்வதற்கு....
மக்களுக்கு அதிகாரம் அளிப்பது தான் ஜனநாயகம்!

எப்படி?

தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனாகி, தங்களுக்கு வேண்டியதை தாங்களே செய்து கொள்ளலாம் என்பது போலவா?

இல்லை!

பின் எப்படி?

தேர்தல் நடத்தப்படும்; மக்கள், அவர்கள் விரும்புவோரைத் தேர்ந்து எடுப்பர்; அவர்களில் பெரும்பான்மையினரின் ஆதரவு பெற்றவர் தலைமையில் ஆட்சியொன்று அமைக்கப்படும்...
அது சட்டப்படி ஆட்சி செய்யும்...
அதற்கு மக்கள் கட்டுப்பட வேண்டும்...

இவ்வாட்சி, "மக்களால், மக்களுக்காக நடத்தப்படும் மக்களின் ஆட்சி" எனப்படும்!

இவ்வாட்சி அமைக்கப்பட்ட பிறகு, மக்கள் சட்டத்தைத் தங்கள் கையில் எடுக்கவோ...

தங்கள் விருப்பப்படி எதையும் செய்வோம் என்று தடி எடுக்கவோ; தண்டல்காரர்கள் ஆகவோ கூடாது....

அப்படி மக்கள் ஆனால், நாடு வன்முறை களமாகவும், சுடுகாடாகவும் ஆகிவிடும்!

ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடம் இல்லை...
சட்டவழிமுறைகளுக்கு மட்டுமே இடம் உண்டு!

ஜனநாயகம் மக்களுக்குத் தந்து இருப்பது ஒரே ஒரு ஆயுதம் தான்....
அது தான்...
வாக்குரிமை என்ற ஆயுதம்!

இதை...
தேர்தல் களத்தில் தான் பயன்படுத்த முடியும்...

மக்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு வரவும், வலியுறுத்தவும் போராடலாம்...
ஆனால் போராட்டங்கள் அமைதி வழியில் அமைய வேண்டும்....
அராஜகங்களாக மாறிவிடக் கூடாது...

மக்கள் ஆதரவின்றி தேர்தலில் தோற்பதையே சாதனை சரித்திரமாகக் கொண்டவர்கள்....

தேர்தல் என்றால் இடியோசை கேட்ட நாகம் போல், அதுவரை காட்டி ஆடிய படத்தை மடக்கிக் கொண்டு ஓடி ஒளிபவர்கள்....

தேர்தல் கூட்டணிக்குக் கட்சிகள் தேவை என தண்டோரா போட்டும் கட்சிகள் கிடைக்காமல், சீ சீ இத்தேர்தல் நமக்குச் சரிப்படாது; மக்களுக்கு ஓட்டு போடத் தெரியாது; விலை போய்விடுவார்கள் என்று கூறி ஒதுங்கியோடும் தலைவர்கள்...

என்று பலரும் பெரும்பான்மை மக்களின் அரசுக்கு எதிராகப் போராடுவது வழக்கம் தான்.....

ஆனால் வன்முறை வெறியாட்டம் ஆடுவது..
பொதுச்சொத்துக்களுக்கு சேதம் வளைவிப்பது..
போலீசாரைத் தாக்குவது...
பொதுமக்களுக்குப் பீதியை ஏற்படுத்துவது....

ஜனநாயகத்துக்குப் பேராபத்தானவையாகும்!

ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் கடமை கொண்ட தலைவர்களே, இப்படித்தான் செய்வோம் என்று முண்டாசு கட்டி முண்டா தட்டுவது..

ஜனநாயகத்திற்குப் பராபத்து என்பதை உரக்கவே பேசும்!

ஜனநாயகத்தின் மீது அக்கரை கண்டவர்கள்...
ஜனநாயக விரோத சக்திகளிடம இருந்து ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய நேரம் இது..

காப்பார்களா....
காப்பாற்ற முன்வருவார்களா...